கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் பைரவா படத்தின் டீசர் நேற்று இரவு 9.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. முதலில் நள்ளிரவில் வெளியிடுவதாகத்தான் அறிவித்திருந்தார்கள். ஆனால், திடீரென இரண்டரை மணி நேரம் முன்னதாகவே வெளியிட்டுவிட்டார்கள். டீசர் வெளியான அடுத்த சில நிமிடங்களுக்குள்ளேயே அதைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் யு டியூப் அந்த எண்ணிக்கையை அப்டேட் செய்யாமலேயே விட்டுவிட்டது.
காலை வரையில் அந்த டீசரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியது. லைக்கே அவ்வளவு இருக்கும் போது டீசரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தைத் தாண்டியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏனோ யு டியூப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை காலை வரையில் அப்டேட் செய்யாமலேயே வைத்திருக்கிறது.
விஜய் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த தெறி படத்தின் டீசர் மிகப் பெரும் சாதனையைப் படைத்தது. அதற்கு முன்னதாக வேதாளம் படம் செய்த சாதனைகளையும் முறிடியத்தது. அடுத்த அஜித் படம் வெளிவருவதற்குள் மீண்டும் ஒரு விஜய் படம் வந்து புதிய சாதனையைப் புரிய ஆரம்பித்துள்ளது. பொதுவாகவே விஜய் நடிக்கும் படங்களின் டீசரோ, டிரைலரோ அல்லது அஜித் நடிக்கும் படங்களின் டீசரோ, டிரைலரோ வெளியில் வந்தால் இருவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வார்கள். அது இப்போது பைரவா டீசரிலும் தொடர்கிறது.
பைரவா டீசரின் சாதனையை முறியடிக்க அடுத்த அஜித் படம் வரும் வரை அஜித் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.