பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா பட வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும், அந்த படத்தைப்பற்றிய பெரிய அளவில் பரபரப்பான செய்திகள் வெளியாகவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து அவ்வப்போது ஏதேனும் செய்திகள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், மதுரை மைக்கேல், 60 வயது அஸ்வின் தாத்தா, ஸ்ரேயா, தமன்னா என பலர் அப்படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் குறித்த செய்திகள் போஸ்டர்களை வெளியிட்டு வந்தவர்கள், இப்போது மூன்றாவது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை யார் என்பதை சொல்லாமல், எஸ்டிஆர் என்ற சிம்பு பெயரின் முதல் எழுத்தில் ஸ்ரேயா, இரண்டாவது டி எழுத்தில் தமன்னா போன்ற நடிகைகள் நடித்துள்ள நிலையில், அடுத்து டிரிபிள் ஏ படத்தில் நடிக்கப் போகும் மூன்றாவது நாயகியின் பெயர் ஆர் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதாக அப்படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனால் ஆர் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் நடிகைகளின் பெயரை யூகித்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட வரும் சிம்புவின் ரசிகர்கள், சீக்கிரம் இந்த ரகசியத்தை உடைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.