தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குமாரி 21F படத்தில் துணிச்சலான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த ஹீப்பா பட்டேல் அடுத்த படத்தில் பிகினி உடையணிந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பிரபல தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் மகன் நாக அன்வேஷ் நாயகனாக நடிக்கும் ஏஞ்சல் படத்தில் நாயகியாக ஹீப்பா பட்டேல் ஒப்பந்தமாகியுள்ளார். ரௌடிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொள்ளும் அப்பாவியான நாயகனை காப்பாற்றும் துணிச்சலான நாயகியாக ஹீப்பா பட்டேல் நடிக்கின்றார். இப்படத்தில் ஹீப்பா பிகினி உடையணிந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஸ்ரீ சரஸ்வதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர்பீம்ஸ் இசையமைக்கின்றார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.