'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேசிய விருது வென்ற கஞ்சே படத்தின் இயக்குனர் க்ரிஷ் இயக்கும் சரித்திர திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம், அப்படத்தின் நாயகன் பால்கிருஷ்ணாவின் 100வது படமாக உருவாகி வருகின்றது. பாலிவுட்டின் முன்னாள் கனவுகன்னி ஹேமமாலினி பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்கின்றார். இப்படத்தின் முன்னோட்டகாட்சிகள் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 2017 ஜனவரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கும் கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படம் என்பதால், பெரிய அளவில் இப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், கௌதமிபுத்ர சடர்கனி படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.