தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் என்னவென்றால் அரபு நாடுகளில் வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெறுவதுதான்.. அங்கு வசிப்பவர்களுக்கு அது சாதாரண விஷயம் என்றாலும் கூட, நம் நாட்டில் வாகனம் ஓட்டி பழகியவர்கள் அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டி லைசென்ஸ் பெறுவது ரொம்பவே சிரமமான காரியம்.. ஆனாலும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு அரபுநாட்டு ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குவது ஒரு லட்சியமாகவே இருந்தது என சொல்லலாம்.
கடந்த வருடம் 'மதுர நாரங்கா' என்கிற படத்தில் துபாயில் பணிபுரியும் டாக்சி ட்ரைவர் கேரக்டரில் நடித்தார் குஞ்சாக்கோ. அப்போது படமாக்கப்பட்ட காட்சிகளின்போது கூட அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் தான் துபாய் சாலைகளில் கார் ஓட்டினார்.. அப்போது எப்படியோ சமாளித்துவிட்டார். இருந்தாலும் கடந்த மாதம் முறைப்படி கார் ஓட்ட கற்றுக்கொள்வதற்காக அங்குள்ள ட்ரைவிங் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சி எடுத்து இப்போது வெற்றிகரமாக லைசென்சும் பெற்றுவிட்டார். இதற்குமுன் மலையாள நடிகர்களில் மம்முட்டி, மோகன்லால் இருவர் மட்டுமே அரபு நாட்டு ட்ரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.. அவர்களுக்கு பயிற்சி அளித்த நபர்தான் குஞ்சாக்கோ போபனுக்கும் பயற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.