இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கான பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் தாணு தயாரிப்பாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் பைவ் ஸ்டார் கதிரேசன். பி.எல்.தேனப்பன், பொதுச் செயலாளர் டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"தயாரிப்பாளர்களின் மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கலுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் வழங்கி இருக்கிறோம். வெளியூரில் உள்ளவர்களுக்கு அவரவர் வீடுகளில் கொண்டு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் தாணு.