ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு - Actress Rambha filed another plea in court
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு

27 அக், 2016 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Actress-Rambha-filed-another-plea-in-court

மாதம், 2.5 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க, கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், பிரிந்து வாழ்கின்றனர். சேர்ந்து வாழ, கணவருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், நடிகை ரம்பா மனு தாக்கல் செய்து உள்ளார். மனு மீதான விசாரணை முடியும் வரை, பராமரிப்பு தொகை கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளார்.


அம்மனுவில் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு முன், சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தேன். பின், நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கும், இரு குழந்தைகளை பராமரிக்கவும், போதிய வருமானம் இல்லை. என் மூத்த மகளின் பள்ளி படிப்புக்கு, ஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. இளைய மகளுக்கு, மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனக்கும், குழந்தைகளின் பராமரிப்புக்கும், மாதம், 2.5 லட்சம் ரூபாய் தேவை. என் கணவருக்கு, தொழிற்சாலை உள்ளது; மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. என்னையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. எனக்கு, 1.5 லட்சம் ரூபாய்; குழந்தைகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் என, 2.5 லட்சம் ரூபாய் வழங்கும்படி, கணவருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement
விஜய், அஜித், சூர்யாவின் தீபாவளி விருந்து!விஜய், அஜித், சூர்யாவின் தீபாவளி ... நாக சைதன்யா இல்லாமல் இருக்க முடியாது - சமந்தா நாக சைதன்யா இல்லாமல் இருக்க ...


வாசகர் கருத்து (3)

VELAN S - Chennai,இந்தியா
13 ஜன, 2017 - 14:15 Report Abuse
VELAN S MNC கம்பெனியில் சாப்ட்வேர் மானேஜராக வேலை செய்யும் , ஒருவருக்கு கிட்டத்தட்ட மாசம் 1 .5 லாக்ஸ் கொடுக்கிறார்கள் , ஆனா , பாருங்க ,இவங்க கேட்கும் ஜீவனாம்சம் ரூ 2 .5 லாக்ஸ் , உழைத்து சம்பாதிக்கிறதைவிட , இது அதிகமாயிருக்கு ,பேசாம , இதை மாதிரி ஏதாவது புழைப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டியதுதான் .
Rate this:
ssssss - Chennai,இந்தியா
27 அக், 2016 - 23:35 Report Abuse
ssssss ஆண் குழந்தை வேண்டும் என்று கொடுமைப்படுத்தும் இவனை சும்மா விட கூடாது.,.
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
27 அக், 2016 - 18:49 Report Abuse
Dol Tappi Maa இது மட்டும் இல்லை. கனடா சட்டத்தின் படி கணவரின் சொத்தில் பாதிக்கு மேல் இவருக்கு வரும். எனக்கு தெரிந்து நடிகை தேவயானி தான் பணம் பார்க்காமல் திருமணம் செய்தவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film manik
  • மாணிக்
  • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
  • நடிகை : சூசா குமார்
  • இயக்குனர் :மார்ட்டின்
  Tamil New Film Melanattu marumagan
  Tamil New Film Mom
  • மாம்
  • நடிகை : ஸ்ரீ தேவி
  • இயக்குனர் : ,ரவி உத்யவர்
  Tamil New Film Puyala Kilambi Varom

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in