பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ஜெயம்ரவியுடன் நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் ஹன்சிகா. ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு பெரிதாக படங்கள் இல்லை. ரோமியோ ஜூலியட் லட்சுமணன்தான் தனது போகன் படத்திலும் அவருக்கு சான்ஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா நடித்து விட்ட நிலையில், அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதாக போகன் யூனிட்டே பெருமையாக சொல்லி வருகிறார்கள். அதனால், ஹன்சிகாவுக்கும் இப்போது பெரிய நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறதாம்.
அதாவது, போகன் படத்தில் அவரது நடிப்பு குறித்து பாசிட்டீவாக பேசி வருகிறார்கள். விளைவு, இதுவரை ஹன்சிகாவின் மார்க்கெட் போய் விட்டது என்று நினைத்து அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வந்த இயக்குனர்கள் இப்போது அவர் பக்கம் திரும்பியுள்ளனர். முக்கியமாக சில புதுமுக டைரக்டர்கள் அவரை தொடர்பு கொண்டு கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை சொல்லி வருகிறார்களாம். இதனால் தமிழ் சினிமா மீது நம்பிக்கையிழந்து ஆந்திராவில் மையம் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு இப்போது தமிழ் படங்கள் மீது மறுபடியும் நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறதாம். அதனால் போகன் வெளியான பிறகு நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா பாணியில் ஹன்சிகாவும் கதையின் நாயகியாக உருவெடுப்பார் என்கிறார்கள்.