இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு நடிகரோ, நடிகையோ வளர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை ரசிகர்களே தொடர்பு கொண்டு ரசிகர் மன்றம் வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் நடிகர்கள்தான் ரசிகர்மன்றம் வைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். நடிகைகளைப் பொறுத்தவரை யாராவது தொடர்பு கொண்டால்கூட மன்றம் தேவையில்லை என்று மறுத்து விடுவார்கள். இந்த நிலையில், தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷை சில ரசிகர்கள் அணுகி ரசிகர் மன்றம் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால், மன்றம் திறப்பது சம்பந்தமாக இதுவரை துளியும் யோசிக்காத கீர்த்தி சுரேஷை தன்னை சந்தித்து ரசிகர்கள் இப்படி கேட்ட பிறகுதான் அதுபற்றியே யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம். இன்னும் தனக்கு ரசிகர் மன்றம் திறப்பது குறித்து அவர் எந்தவித உத்தரவாதமும் கொடுக்காதபோதும், தனது வளர்ச்சியை குறித்து இப்போதுதான் எண்ணிப்பார்க்கிறாராம். அதோடு, தனக்கும் முன்னணி நடிகர்களுக்கு வைப்பது போன்று கட்அவுட், பேனர் வைக்கப்போவதாக ரசிகர்கள் சொன்னது கீர்த்தி சுரேஷ்க்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளதாம்.