Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2016 தீபாவளி படங்கள் ஒரு பார்வை...!

26 அக், 2016 - 16:39 IST
எழுத்தின் அளவு:
2016-Diwal-tamil-movies...-small-round-up

தீபாவளி என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டமோ இல்லையோ, சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அது என்னமோ தெரியவில்லை, மற்ற விசேஷ நாட்களை விட தீபாவளியன்று தங்களது படங்களை வெளியிட பலரும் விரும்புகிறார்கள். தீபாவளிக்கு வெளிவரும் படங்கள் மீதும் எப்போதும் ஒரு தனி கவனம் இருக்கிறது.


முன்பெல்லாம் ஒவ்வொரு தீபாவளிக்கும் சுமார் 10 படங்களாவது வெளிவரும். எந்தப் படத்தை அன்றே பார்ப்பது, எந்தப் படத்தை அடுத்த நாள் பார்ப்பது என்று நண்பர்களுடன் கூடிப் பேசி முடிவெடுத்து படம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.


இந்த வருட தீபாவளிக்கும் வழக்கம் போலவே வெளிவருவதாகச் சொல்லப்பட்ட படங்களில் சில போட்டியிலிருந்து விலகின, சில படங்கள் புதிதாகச் சேர்ந்தன. தற்போது வரை தீபாவளியை முன்னிட்டு சுமார் 5 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கடைசி நேரத்தில் கூட சில மாறுதல்கள் வரலாம். இருந்தாலும் இன்றைய நிலவரப்படி வெளியாக உள்ள படங்களைப் பற்றிப் பார்ப்போம்.


கொடி


தயாரிப்பு - கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி


தயாரிப்பாளர் - இயக்குனர் வெற்றி மாறன்


இயக்கம் - துரை. செந்தில்குமார்


இசை - சந்தோஷ் நாராயணன்


ஒளிப்பதிவு - வெங்கடேஷ்


படத் தொகுப்பு - பிரகாஷ் மப்பு


பாடல்கள் - விவேக், அருண்ராஜா காமராஜ், தனுஷ்


நடிகர்கள் - தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பலர்


'ஆடுகளம்' படம் மூலம் தனக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த இயக்குனர் வெற்றி மாறனின் தயாரிப்பு நிறுவனத்திற்காக தனுஷ் நடித்துக் கொடுத்துள்ள படம். 'எதிர்நீச்சல், காக்கிச் சட்டை' படங்களுக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கியுள்ள படம். தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இசையமைக்கும் படம், தனுஷ் ஜோடியாக த்ரிஷா முதல் முறையாக நடிக்கும் படம், தனுஷ் முதல் முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படம், என சில சிறப்புகள் இந்தப் படத்திற்கு உண்டு.


இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நீண்ட நாட்களாகிவிட்டது. படம் முடிந்தும் சில மாதங்கள் அப்படியே காத்திருந்து 'தொடரி' படம் வெளியானதும் இப்படத்தை வெளியிடுகிறார்கள். அரசியல்தான் படத்தின் கதைக் களம். இருந்தாலும் தனுஷின் வழக்கமான அதிரடி, சென்டிமென்ட், காதல், நகைச்சுவை ஆகியவையும் படத்தில் உண்டு. தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா அக்கா மாதிரி தெரிவாரா என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும், மறு பக்கம் அனுபமா பரமேஸ்வரனை தனுஷின் ஜோடியாக்கி பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.


'வேலையில்லா பட்டதாரி' படம் போன்ற வெற்றியைப் பெற வேண்டும் என தனுஷ் இந்தப் படத்திற்காக இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு ஊர் ஊராகச் சென்று படத்தை பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார். மீண்டும் தன்னுடைய வெற்றிக் கொடி பறக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தனுஷ்.


காஷ்மோரா


தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்


தயாரிப்பாளர்கள் - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு


இயக்கம் - கோகுல்


இசை - சந்தோஷ் நாராயணன்


ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்


படத் தொகுப்பு - சாபு ஜோசப்


நடிகர்கள் - கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் மற்றும் பலர்.


'காஷ்மோரா' என்றால் என்ன அர்த்தம் என்று இதுவரை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. படம் பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள் என சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். படத்தின் டிரைலரைப் பார்த்ததும் 'பாகுபலி' படம் போல இருக்குமோ என பேச்சு எழுந்தது. அதனால்தான் கார்த்தி கூட 'இது பாகுபலி அல்ல' என மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். 'ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களுக்குப் பிறகு கோகுல் இயக்கியுள்ள படம்.


'பிளாக் மேஜிக்' என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அதே சமயம் படத்தில் நகைச்சுவைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்கிறார்கள். படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் அரை மணி நேரம் மட்டும்தான் வருகிறதாம். கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டும் 90 நிமிடங்கள் வருகிறதாம். இந்தப் படத்திற்காக 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.


படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு ஹீரோயின்கள். இருந்தாலும் படத்தில் காதல் காட்சிகள் இல்லையாம்.


கார்த்தி நடித்து கடைசியாக வெளிவந்த 'மெட்ராஸ், கொம்பன், தோழா' ஆகிய படங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்தன. அந்த வெற்றி இந்தப் படத்திலும் தொடரும் என படக்குழுவினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.


கடலை


தயாரிப்பு - உதயம் என்டர்டெயின்மென்ட்


இயக்கம் - சகாயசுரேஷ்


இசை - சாம் சி.எஸ்


பாடல்கள் - நா. முத்துக்குமார், சாம் சி.எஸ், ரஞ்சித் ஜெயக்கொடி


ஒளிப்பதிவு - ராகவ்


படத்தொகுப்பு - எ.எல்.ரமேஷ்


நடிகர்கள் - மகாபா ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பொன்வண்ணன், யோகி பாபு, ஜான் விஜய் மற்றும் பலர்.


தொலைக்காட்சி வர்ணனையாளராக இருந்து நாயகனாக மாறியுள்ள மகாபா ஆனந்த் நாயகனாக நடித்துள்ள படம். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். நகைச்சுவை உணர்வுடன் நடிக்கக் கூடிய வளரும் நடிகர்களில் ஆனந்தும் ஒருவர்.


'காஷ்மோரா, கொடி' என இரண்டு பெரிய படங்கள் வந்தாலும் அவர்களுடன் போட்டி போட்டு இந்தப் படத்தைத் தைரியமாக வெளியிடுகிறார்கள். “பெரிய படங்கள் வந்தாலும் அவர்களுடன் நாங்களும் வருகிறோம். என்னைப் பொறுத்தவரையில் எல்லா படங்களுமே ஓட வேண்டும். நல்ல படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு தருவார்கள். அது எங்களது படத்திற்கும் கிடைக்கும்.


இந்தப் படம் மிக மிக ஜாலியான படம். மகாபா ஆனந்த், யோகி பாபு நகைச்சுவை நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள். அதோடு, விவசாயம் பற்றிய ஒரு நல்ல கருத்தை மையமாக வைத்திருக்கிறோம். அனைவரும் குடும்பத்துடன் வந்து கண்டு ரசிக்கும்படியான படமாக இந்த 'கடலை' இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் சகாய சுரேஷ்.


சுமார் 200 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய படம், சிறிய படம் என்பதெல்லாம் படம் வெளிவரும் வரைக்கும்தான். வெளிவந்த பிறகு வெற்றி பெறும் படங்களே பெரிய படங்கள். அந்த விதத்தில் 'கடலை' படம் பெரிய படமாக அமையும் என படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.


திரைக்கு வராத கதை


தயாரிப்பு - எம்.ஜே.டி புரொடக்ஷன்ஸ்


தயாரிப்பாளர் - கே.மணிகண்டன்


இயக்கம் - துளசிதாஸ்


இசை - எம்.ஜி.ஸ்ரீகுமார்


ஒளிப்பதிவு - சஞ்சீவ் சங்கர்


படத் தொகுப்பு - ஸ்ரீனிவாஸ்


நடிகர்கள் - நதியா, இனியா, ஆர்த்தி, ஈடன், கோவை சரளா மற்றும் பலர்


உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக முற்றிலும் பெண்கள் மட்டுமே நடித்துள்ள படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. மலையாளத்தில் பல படங்களை இயக்கிய துளசி தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பெண்கள் மட்டுமே இருந்தாலும் காதலும் இருக்கிறதாம். அது எப்படி என்பதுதான் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இரண்டு தோழிகளுக்கு இடையே உள்ள நட்பை கொச்சைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் துளசி தாஸ்.


நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு ஓரளவிற்காவது நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. தமிழில் மட்டும்தான் நதியா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. மலையாளப் படங்களில் அவர் நடித்திருப்பதற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை. மற்ற படங்களுடன் இந்தப் படமும் தீபாவளிப் போட்டியில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியம்தான்.


இந்த நான்கு படங்களுடன் 'விருகம்' என்ற படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வழக்கம் போல பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் ஆகியவற்றுடன் இந்த தீபாவளிப் படங்களையும் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்து உற்சாகமாக இருங்கள்....


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in