மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஹிந்தியில் பிரபலமான இயக்குநர்களில் ராம்கோபால் வர்மாவும் ஒருவர். சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக சர்கார் 3 படத்தை இயக்குகிறார். இப்படத்திலும் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் யாமி, ஜாக்கி ஷெரப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். சர்கார் -3 படத்தில் அமிதாப் பச்சன் பாடப்போவதாக செய்திகள் வெளியாகின.
இதைப்பற்றி அமிதாப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது....."காலை 3 மணிக்கு தான் சர்கார்-3 படப்பிடிப்பை முடித்து விட்டு வீடு திரும்பினேன். அடுத்தப்படியாக படத்தில் பாட்டு பாடுவதற்காக செல்கிறேன்" என்று கூறிப்பிட்டு இருந்தார்.
அமிதாப்பச்சனின் இந்த டுவிட்டு மூலம் இப்படத்தில் அவர் பாடயிருப்பது உறுதியாகியிருக்கிறது.