ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கஞ்சீவரம் படத்திற்கு பிறகு விருதை நோக்கிய படமாக சில சமயங்களில் என்ற படத்தை இயக்கி உள்ளார் பிரியதர்ஷன். இதனை ஐசரி கணேசும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் இணைந்து தயாரித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்குமோ என்ற சந்தேகம் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளச் செல்கிறார். காலை 9 மணிக்கு பரிசோதனைகாக ரத்தம் கொடுக்கும் அவர் மாலை 5 மணிக்கு ரிசல்ட் வரும்வரை காத்திருக்கிறார். அந்த நேரத்தில் அவரது மனதில் ஓடும் எண்ணங்களே திரைக்கதை. இதில் பிரகாஷ்ராஜ் எய்ட்ஸ் பரிசோதனைக்கு வருகிறவராக நடித்திருக்கிறார். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு படம் என்பதாலும். லாப நோக்கம் இல்லாததாலும் இந்த படத்தில் சம்பளமே பெற்றுக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.