ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலின் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். உதயநிதியின் அந்த ஓப்பனிங் படங்களுக்கு சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் கைகொடுத்தன. அதன்பிறகு அவர் நடித்த கெத்து, மனிதன் படங்களில் பெரிய காமெடியன் யாரும் இடம்பெறாத நிலையில், தற்போது உதயநிதி நடித்து வரும் சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய இரண்டு படங்களிலுமே சூரி நடித்து வருகிறார்.
அந்த வகையில், உதயநிதியின் முதல் மூன்று படங்களிலும் எப்படி அவருடன் சீன் பை சீன் சந்தானம் நடித்தாரோ அதேபோல் இப்போது சூரியும் இந்த படங்களில் நடிக்கிறாராம். கூடவே பாடல் காட்சிகளிலும் நடனமாடுகிறாராம். இப்படி தனக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதால், மற்ற படங்களைப் போன்று துண்டு துண்டாக கால்சீட் கொடுக்காமல் மொத்த கால்சீட் கொடுத்து நடித்துள்ள சூரி, தான் நடிக்க வேண்டிய காமெடி காட்சிகளை ஒரு டீமை வைத்து அவ்வப்போது ஸ்பாட்டிலேயே சுடச்சுட தயார் செய்தும் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.