தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
மேகா படத்தில் நடித்தபோது இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுத்தவர் சிருஷ்டி டான்கே. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் பின் தங்கியே இருந்து வந்த அவர், விஜயசேதுபதியுடன் நடித்த தர்மதுரை படத்தில் நடித்த பிறகு மறுபடியும் பேசப்பட்டார். அந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளும் நடித்திருந்தபோதும் குறைவான நேரமே வந்த சிருஷ்டி டான்கே சில காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். அதன்காரணமாக இப்போது அவரது கைவசம் காலக்கூத்து, முப்பரிமாணம், பொட்டு, சத்ரு, சரவணன் இருக்க பயமேன் என பல படங்கள் உள்ளன.
இதில், சரவணன் இருக்க பயமேன் படத்தில் ரெஜினாவுடனும், காலக்கூத்துவில் தன்ஷிகா, பொட்டுவில் நமீதா, இனியாவுடனும் இணைந்து சில நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் சிருஷ்டி டான்கே, சத்ரு, முப்பரிமாணம் படங்களில் சிங்கிள் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களில் கதிருக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் சத்ரு படத்தில் கலக்கலான ரோலில் நடிக்கிறார். அதோடு சிருஷ்டி டான்கேவின் ஓப்பனிங்கையே கலக்கலாக படமாக்கியிருக்கிறார்களாம். அந்த வகையில், கவர்ச்சி கலக்கல், காமெடி கலக்கல் என மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் சிருஷ்டி டான்கே, இந்த படத்திற்கு பிறகு அதிரடி கவர்ச்சி ரவுண்டை ஆரம்பிக்கப்போவதாகவும் நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார். இந்த சேதி பரவியதை அடுத்து கமர்சியல் பட டைரக்டர்கள் சிருஷ்டியை முற்றுகையிட்டு வருகின்றனர்.