இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு திரை உலகில் பல ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் ஐஎஸ்எம். கல்யாண் ராம் மற்றும் அதிதி ஆர்யா ஜோடி சேர்ந்த ஐஎஸ்எம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சராசரியான வசூலை ஈட்டி வருகின்றது. இப்படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட பூரி ஜெகன்நாத், ஹிங்கிலீஷில் திரைப்படம் இயக்குவதே தனது கனவு என கூறியுள்ளார். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து, ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் இந்திய நடிகர்களின் பங்களிப்புடன் திரைப்படம் ஒன்றை இயக்குவதே தனது லட்சியம் என்று பூரி ஜெகன்நாத் கூறியுள்ளார். ஐஎஸ்எம் படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆரை நாயகனாக வைத்து மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க பூரி ஜெகன்நாத் திட்டமிட்டுள்ளார்.