இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நமது ஊரில் பொதுவாக மேடைகளில் பேசும் நடிகைகளாகட்டும் இல்லை இன்னும் ஒரு சில நடிகர்களாகட்டும் மற்றவர்களின் எளிமையை பாராட்டுவதற்கு 'டவுன் டு எர்த் பெர்சன்' என்கிற வார்த்தையை குறிப்பிடுவார்கள்.. மம்முட்டியுடன் இண்டர்வியூ ஒன்றில் பங்கேற்ற நடிகை ஒருவர் அந்தப்படத்தின் இயக்குனரை இதேபோல 'டவுன் டு எர்த் பெர்சன்' என சொன்னார்.. உடனே மம்முட்டி.. “ஆமாம்.. ஏதாவது ஒரு விஷயத்துக்கு அவரை அழைக்கும்போது கூட இப்படி கீழே இருந்து மேலே தூக்கி நிறுத்தித்தான் பேசவேண்டும்.. அதனால் தான் அவரை 'டவுன் டு எர்த்' என்கிறோம்' என புது விளக்கம் கொடுத்தார்..
மெகாஸ்டார் மம்முட்டியை பொறுத்தவரை படங்களில் காமெடியாக நடித்தாலும் நேரில் பேசும்போது சீரியசானவர் என்றே பலரும் சொல்வதுண்டு.. ஆனால் மம்முட்டியின் டிவி பேட்டிகளை கண்டவர்கள் அந்த கருத்தை மாற்றிக்கொள்ளவே செய்வார்கள்.. தான் சொல்லவந்த விஷயங்களை காமெடி கலந்து மற்றவர்கள் சிரிக்க சிரிக்க பேசுவதில் மோகன்லாலை விட மம்முட்டி தான் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.