இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான, சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சென்னை 28-II என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. சென்னை 28 படத்தில் நடித்த அதே நடிகர்களுடன் புதியவர்கள் சிலரும் இணைந்திருக்கிறார்கள். சம்பீத்தில் இவர் சென்னை 28 - II படத்திற்காக யூடூபில் வெளியிட்ட இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை கடந்திருப்பது சென்னை 28 - II படத்திற்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.
இதுப்பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது... "எங்கள் சென்னை 28 - II படத்தின் இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் மூலம் நாங்கள் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருப்பது, எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்" என்று உற்சாகமாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.