ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் பிஜூமேனனை இப்போதெல்லாம் குணச்சித்திர வேடங்களில் பார்க்க முடிவதே இல்லை.. பின்னே.. அவர்தான் 'வெள்ளிமூங்கா' பட ஹிட்டுக்குப்பின்னால் கதாநாயகனாக மட்டும் தானே நடித்துவருகிறார். அந்தவகையில் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற டைட்டிலில் நடித்ததுபோல, 'ரக்சதிகாரி பைஜூ' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிசுமேண்ணன்.. இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பையொலி என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது.. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர் என்பதால் தினசரி இந்தப்படத்தின் ஷூட்டிங்கை பார்க்க ஏராளமானோர் குவிகின்றனர்..
குறிப்பாக படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலேயே உள்ள பள்ளி மாணவர்கள். பள்ளி முடிந்ததும் நேராக இங்கே தான் ஆஜராவது வழக்கம். அப்படி நேற்று முன் தினம் அங்கே இருந்த மதில் சுவற்றில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருன்தனர்.. அப்போது திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சுமார் முப்பது மணாவர்கள் காயம் அடைந்தனர்.. அதிக காயம் அடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கபட்ட, மற்றவர்களுக்கு உள்ளூர் சுகாதார நிலையத்தில் காயத்திற்கான மருந்து அளிக்கப்பட்டது.. யாருக்கும் சீரியசான அளவில் எதுவும் ஆகவில்லை என்பதால் பிஜூமேனன் உட்பட படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.