இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த வருடத் துவக்கத்தில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் பத்து மாத காலங்களில் நிறைவடைந்துள்ளது. சென்னை, விசாகப்பட்டிணம், ஐதராபாத், ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் முதல் பாகம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டு வெளிவந்தது. இந்த இரண்டு பாகங்களும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், மூன்றாவது பாகத்திற்கு 'சிங்கம் 3' எனப் பெயர் வைக்காமல் 'எஸ் 3' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை ஒரே சமயத்தில் தெலுங்கிலும் வெளியிட உள்ளார்கள்.
சூர்யாவிற்கு இதற்கு முன் வெளிவந்த சில படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைத் தராததால் அவர் 'எஸ் 3' படத்தைத்தான் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்றபடி இப்படத்தின் வியாபாரமும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நடந்து முடிந்தது. முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா, மூன்றாவது பாகத்திலும் இருக்கிறார். கூடவே மற்றொரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 16ம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள்.