பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அண்மையில் வெளிவந்த ராம் சரணின் துருவா படத்தின் டீசர் 3.5 மில்லியன் வியூவ்ஸ் எட்டியுள்ளதால் ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினர் ஏக குஷியுடன் இருக்கின்றனர். தமிழில் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தில் சிங் நடிக்கின்றார். துருவா படத்தில் ராம் சரண் போலீஸாக நடிக்கின்றார். போலீஸ் வேடத்திற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் ராம் சரணுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. துருவா படத்தில் ராம் சரணின் ஸ்டைலான போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. கட்டுடலுடன் கச்சிதமாக தோற்றமளிக்கும் ராம் சரணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றதாம். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கும் துருவா திரைப்படம் டிசம்பரில் திரைக்கு வரவுள்ளது. நவம்பர் 20ல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.