இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் ‛எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி'. தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. கிட்டத்தட்ட கான் நடிகர்களின் படங்களுக்கு சமமாக வசூலை குவித்துள்ளது, இன்னும் வசூலை குவித்து கொண்டுள்ளது. இதனிடையே தோனி படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற ‛தோனி' எனும் பெயர் தான் காரணம் என்று கூறியுள்ளார் சுசாந்த் சிங்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛தோனி எனும் பிராண்ட் பெயர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற உதவியது. இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமோ, அவமானமோ இல்லை. நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில் வெளியான படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு தோனியின் வாழ்க்கையை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தனர், அதனால் தான் படமும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது'' என்றார்.
தோனி படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ரூ.130 கோடி வசூலித்திருக்கிறது. இன்னும் வசூலித்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.