Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊழல் புகார் - நடிகர் சங்க கணக்கு வழக்குகள் வெளியீடு

24 அக், 2016 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-accounts-released-in-net

நடிகர் சங்க கணக்கு விபரங்கள், அனைவரும் பார்க்கும் வகையில், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சரத்குமார் தலைமையிலான நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகித்து வந்தனர். அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததாலும், நடிகர் சங்க கட்டத்தை கட்டும் விவகாரத்தாலும், அந்த அணியினர் கடந்தாண்டு நடந்த தேர்தலின்போது தோல்வியடைய, நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் தலைமையிலான புதிய அணியினர் பொறுப்பு ஏற்றனர். முதலில் அவர்கள் பதவியேற்றதும் நடிகர் சங்க நிலத்தை மீட்டு, கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தி ஒரு பங்கு தொகையை சேமித்தனர்.


இந்நிலையில், வராஹி என்ற உறுப்பினர் தற்போதையை நடிகர் சங்க நிர்வாகிகள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி பல்வேறு மோசடிகள் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். ஆனால் நடிகர் சங்கமோ எந்த மோசடியும் நடக்கவில்லை, அனைத்திற்கும் சரியாக கணக்கு வைத்துள்ளோம் என்று கூறினர்.


இந்நிலையில், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான தீபாவளி பரிசு வழங்கும் விழா, சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது பேசிய விஷால், நடிகர் சங்க நிலத்தின் மீது இருந்த கடனை அடைத்து விட்டோம். நாங்கள் ஊழல் செய்துள்ளதாக, சிலர் வீண் பழி சுமத்துகின்றனர். நட்சத்திர கிரிக்கெட் உட்பட, இதுவரையிலான சங்க கணக்குகளை, நடிகர் சங்க இணையதளத்தில், இன்று(அக்.,24-ம் தேதி) சங்க பொருளாளர் கார்த்தி வெளியிடுகிறார். அதை புகார் கூறுவோர் மட்டுமின்றி, அனைவரும் பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.


அதன்படி, நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் வரவு, செலவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2016, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கணக்குகள் சமர்பிக்கப்ட்டுள்ளன. அதில் சங்கத்திற்கு, கிரிக்கெட் நடத்தியதன் மூலம் கிடைக்கப்பட்ட வருவாய் ரூ.12,57,62,776 என்றும், சங்க நிலம் மீட்பு, கிரிக்கெட் நடத்திய செலவு ரூ.4,10,61,942 என்றும், மீதம் ரூ.8,47,00,834 இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in