ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான பிரேமத்தில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அதில் 3 ஹீரோயின்களில் ஒருவர்தான் இவர். ஆனாலும் மூன்று பேருமே இப்போது பிசி. மலையாளத்தில் நடித்த கையோடு காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த அந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக கவண் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கே.வி.ஆனந்த் இயக்கும் அந்தப் படம் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் தனுஷ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் பவர் பாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்தப் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.