'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித் நடித்த வேதாளம் படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தபோது அஜித்திற்கு விபத்து ஏற்பட்டதால், அதையடுத்து அவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடத்தப் பட்டு, பல மாதங்களாக அவர் ஓய்வில் இருந்தார். பின்னர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்று திரும்பிய பிறகு மீண்டும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்த பிறகு தற்போது ஆந்திராவில் நடந்து கொண் டிருக்கிறது.
இந்நிலையில், இந்த படம் குறித்த டைட்டீல் அல்லது டீசர் என ஏதாவது ஒன்று தீபாவளிக்கு வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போதுவரை அதுபற்றிய எந்தவொரு தகவலும் அப்படக்குழுவில் இருந்து வெளியிடப்படவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து மதுரையைச்சேர்ந்த அஜித் ரசிகர்கள், துக்க தீபாவளி என்று ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், அஜித் படம் வராத திரையரங்கு எங்களுக்கு சிறை அரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி என்று அதில் அச்சிட்டுள்ளனர்.