டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என எந்த நடி கர்களின் படங்களும் ரிலீசாகவில்லை. தனுஷ் நடித்துள்ள கொடி, கார்த்தியின் காஷ்மோரா இவைதான் இந்த தீபாவளியின் நேரடி போட்டி படங்கள். இவை தவிர சில படங்கள் பின்வாங்கி விட்டபோதும் மேலும் சில படங்களும் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. ஆனபோதும், எதிரும் புதிருமான பெரிய போட்டிப்படங்கள் என்கிற பரபரப்பு வளையத்திற்குள் இந்த படங்கள் சிக்கவில்லை. ஆனால், திரிஷா-நயன்தாராவை முன்வைத்து போட்டியை உருவாக்கி விட்டுள்ளனர்.
அதாவது, தற்போது இவர்கள் இருவருமே கதையின் நாயகிகளாக நடித்து வருவதோடு, அவர்களுக்கென்றும் ஒரு கமர்சியல் வேல்யூ இருப்பதால், தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நயன்தாரா படம் ஜெயிக்குமா? இல்லை திரிஷா படம் ஜெயிக்கும்? என்று கோலிவுட்டில் ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த இரண்டு படங்களின் பப்ளிசிட்டி பேனர்களை கதாநாயகர் களுக்கு இணையாக திரிஷா-நயன்தாராவின் படங்களும் பெரிய அளவில் இடம் பெறுகிறதாம். குறிப்பாக, காஷ்மோராவில் நடித்துள்ள நயன்தாராவுக்கு தனி கட்அவுட்டும் வைக்கப்படுகிறதாம்.