தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் யாரும் இந்தி சினிமாவில் நேரடியாக நடிக்காத நிலையில், ராஞ்ஜனா, ஷமிதாப் படங்களில் நடித்து நூறு கோடி வசூல் நாயகனானார் தனுஷ். அதன்பிறகு தமிழில் பிசியாக விட்ட அவர், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் அவர் நடிக்கும் ஒரு படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, தற்போது கொடி படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள தனுஷ், என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, பவர்பாண்டி என்ற படத்தை இயக்கியும் வருகிறார். இந்த படங்களை முடித்ததும் அவர் ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது ஹாலிவுட் நடிகரை நடிக்க வைத்து பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளனர்.
அதன்காரணமாக, ஹாலிவுட் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற அல் பஷினோ -என்ற நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அப்படி அவர் தனுஷ் படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டால், அந்த படத்தின் பட்ஜெட் எகிறி விடுவதோடு, தனுஷ் படங்களில் பிரமாண்ட பட்ஜெட் படமாகி விடும் என்கிறார்கள்.