மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ்.எம். இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு ரெடி.
தற்போது படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்கப்பட்டிருக்கிறது. சென்னை சிட்டி ஏரியாவை எஸ்.பி.ஐ சினிமாவும், செங்கல்ட்டு ஏரியாவை வி.கிரியேஷன்சும், கோவை ஏரியாவை என்.ஈ மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், மதுரை ஏரியாவை கந்தசாமி ஆர்ட்ஸ் நிறுவனமும், திருச்சி, தஞ்சை ஏரியாவை மன்னன் பிலிம்சும், சேலம் ஏரியாவை ஆதித்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், வட ஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாவை நந்தினிதேவி பிலிம்சும் வாங்கி உள்ளது. திருச்சி தஞ்சை ஏரியா தவிர மற்ற அனைத்து ஏரியாக்களும் எம்.ஜி. அடிப்படையில் விற்கப்பட்டிருக்கிறது. ஜி.வி.பிரகாசின் தொடர் வெற்றிகளும், வசூலுக்கு மினிமம் கியாரண்டி இருப்பதாலும் விற்பனையாகி உள்ளது.