இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காஞ்சனா-2 படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. தெலுங்கில் வெளியான பட்டாஸ் படத்தின் ரீமேக் கான இந்த படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். சாய் ரமணி இயக்கும் இந்த படத்தில் லாரன்சுடன் பல படங்களில் நடித்த கோவை சரளா, தேவதர்ஷினி, மனோ பாலா மற்றும் லட்சுமி ராய் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரித்து வரும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், சில பாடல் கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில், பி.வாசு இயக்கி வரும் சிவலிங்கா படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் லாரன்ஸ். சந்திரமுகி-2 என்று கூறப்படும் இந்த படத்தில் வடிவேலு வும் இணைந்திருப்பதால், அதிரடி காமெடி காட்சிகளில் லாரன்ஸ்-வடிவேலு இருவரும் கைகோர்த்துள்ளனர். அந்த வகையில், இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பாடல் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ். அவருடன் இணைந்து நிக்கி கல்ராணியும், ஒரு பாடலில் நட்புக்காக ராய்லட்சுமியும் நடனமாட உள்ளனர். அதையடுத்து அப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிடுகிறார்களாம். ஆக, அடுத்த ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா என்ற இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.