தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து சிவகார்த்திகேயன் வழியில் ஹீரோவாகியிருப்பவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு நவரச திலகம், அட்டி படத்தில் நடித்தார். இரண்டுமே வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அடுத்து வருகிறது கடலை. வருகிற தீபாவளி ரேஸில் தனுஷ், கார்த்தியோடு களம் இறங்குகிறார் மா.கா.பா. ஆனந்த்.
விளம்பர படங்களை இயக்கி வந்த வி.சகாய சுரேஷ், கடலை படத்தை இயக்கி உள்ளார். என்.ராகவ் இசை அமைத்துள்ளார், சி.எஸ்.சாம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின். பொன்வண்ணன் யோகி பாபு, ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பொன் வண்ணன் நல்ல விவசாயி, மகன் மா.கா.பா.வுக்கு விவசாயம் பிடிக்காது. திடீரென பிடிக்க ஆரம்பித்து விடும் ஏனென்றால் அவர் காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அக்ரி ஸ்டூடண்ட். இப்படி காமெடியாக போகும் கதை. இந்தப் படம் தன்னை கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறார் மா.கா.பா. ஆனந்த்.