'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகருமான ராம் சரண், தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்துள்ளார். துருவா எனும் தலைப்புடன் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கின்றார். விஜயதசமியில் வெளிவந்த இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், துருவா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நவம்பர் 20ல் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி கைதி நம்பர் 150 படத்தில் பிசியாக இருப்பதால் அவரது சகோதரரும் பவர் ஸ்டார் நடிகருமான பவன் கல்யாண் துருவா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துருவா திரைப்படத்தை டிசம்பர் 2ல் வெளியிடவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.