ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் நக்ஷத்ரம். போலீஸாக துடிக்கும் நாயகனை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட துவங்கியுள்ளனர். சாய் தரண் தேஜ் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் நக்ஷத்ரம் படத்தின் போஸ்டர் ஒன்றை ராம் சரண் வெளியிட்டுள்ளார். சாய் தரண் தேஜின் உறவினரும் இயக்குனர் வம்சியின் நெருங்கிய நண்பருமான ராம் சரண் நக்ஷத்ரம் படத்தின் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு படம் வெற்றி அடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷான் மற்றும் இயக்குனர் வம்சி கேட்டுக் கொண்டதற்கினங்க, சாய் தரண் தேஜ் இப்படத்தில் அதிரடி போலீஸ் எனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நக்ஷத்ரம் படத்தில் சாய் தரண் தேஜ், தோன்றும் காட்சிகள், 20 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகின்றது.