தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவில் கடந்த 14 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக பவனி வருகிறார் த்ரிஷா. ஏறக்குறைய த்ரிஷாவின் மார்க்கெட் சரிவடைந்துவிட்டநிலையில் தற்போது மறுபடியும் அவருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. தற்போது தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்துள்ள த்ரிஷா அடுத்து ஆர்.மாதேஷ் இயக்கத்தில் 'மோகினி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மோகினி படத்தை அடுத்து 'சதுரங்கவேட்டை-2' படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இந்த படங்களுடன் இன்னும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் த்ரிஷா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா! இதுவரை அவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்ததில்லை. அந்த குறையை போக்கிவிட்டார் புதுமுக இயக்குநர் பிரேம் குமார்.
விஜய்சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்தான் இந்த பிரேம் குமார். ஆரம்பகாலத்தில் இவர் விஜய்சேதுபதியின் நண்பர். அந்த அடிப்படையில் அவருக்கு கால்ஷீட் கொடுத்து தன்னை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைப் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி!