இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தேசிய விருது பெற்ற நடிகையான வித்யாபாலன், தற்போது கஹானி-2, பேகம் ஜான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், பேகம் ஜான் படத்தில், பேகம் ஜான் எனும் ரோலில் வித்யாபாலன் நடிக்கிறார். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார். பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களை மையப்படுத்திய கதை இது. இப்படம் அடுத்தாண்டு ஜன.,6ம் தேதி ரிலீஸாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, பேகம் ஜான் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை.
இதுப்பற்றி விசாரித்ததில், ‛வித்யாபாலனின் கஹானி-2 படம் நவம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது, அதனால் ‛பேகம் ஜான்' படத்தை ஒரு இரண்டு-மூன்று மாதம் தள்ளி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.