ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜி.வி.பிரகாஷ்குமார், கீர்த்தி கர்பண்டா, பால சரவணன், மூனீஷ்காந்த் நடிக்கும் படம் புரூஸ் லீ. இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கி உள்ளார். பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது:
என்னுடைய உதவியாளர்கள் இயக்குனர்களாக மாறி வருவது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு இயக்குனருக்கு இதைவிட வேறு பெருமை தேவையில்லை. இந்தப் படத்தின் இயக்குனர் குருவாகிய எனது பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். அது தவறு பாண்டியராஜ் என்பது அவரது தந்தையின் பெயர். ஆனால் குருவின் பெயரை போட்டிருப்பதாக ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார். என்னிடம் வேலை பார்க்கும்போதே இந்த பட வாய்ப்பை எப்படியோ பெற்று விட்டார்.
ஜி.பி.பிரகாஷ் நிறைய படங்களில் நடிக்கிறார். படத்துக்கு படம் தன்னை மெருகேற்றி வருகிறார். இந்த நேரத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்த வருடம் வேண்டுமானல் நீங்கள் அதிக படத்தில் நடித்திருக்கலாம். அடுத்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ்தான் நடிப்பார், மாதம் ஒரு படம் வெளிவரும். அவருடைய வளர்ச்சி பெருமையாக இருக்கிறது. என்றார் பாண்டிராஜ்.