ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யாழ் தமிழ்திரை நிறுவனத்தின் சார்பில் கு.சுரேஷ்குமார் தயாரித்த படம் கதிரவனின் கோடைமழை. கண்ணன், ஸ்ரீப்ரியங்கா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்திருந்தார்கள். கதிரவன் இயக்கி இருந்தார். ஹீரோ கண்ணன், தனுசின் சித்தப்பா மகன். படம் முழுக்க சங்கரன்கோவில் பகுதியில் எடுக்கப்பட்டது. சாம்பசிவம் இசை அமைத்திருந்தார் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.
இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்தது. ஆனால் அப்போது வந்த சில பெரிய படங்கள் காரணமாக ஒரு சில தியேட்டர்களில் மட்டும் திரையிடப்பட்டது. வெளியூர்களில் வெளியாகவில்லை. தற்போது இந்தப் படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷ்குமார் படம் நன்றாக இருக்கிறது. சில திருத்தங்களை செய்தால் மீண்டும் வெளியிடலாம் என்று தனக்கு தோன்றிய திருத்தங்களை சொன்னார். அதன்படி சில காட்சிகள் நீக்கப்பட்டு, சில காட்சிகள் சேர்க்கப்பட்டு படம் மீண்டும் தயாரானது. புதிய மெருகுடன் படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது.