நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் தற்போது இயக்கியுள்ள படம் காஷ்மோரா. கார்த்தி நாயகனாக நடித் துள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான சரித்திர கால கெட்டப்பில் நடித்துள்ளார் கார்த்தி. சில காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பர்பாமென்சில் மட்டுமின்றி டப்பிங்கிலும் வித்தியாசப்படுத்தி நடித்துள்ளார் கார்த்தி.
மேலும், தீபாவளிக்கு ரிலீசுக்கு தயாராகி விட்ட காஷ்மோரா, படம் சென்சார் சான்றிதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது யு சான்றிதழ்தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தைப்பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். அதனால் காஷ்மோரா படம் தமிழக அரசின் வரிவிலக்கு பெறும் சலுகையை இழந்திருக்கிறது.