ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் என சில படங்களில் நடித்தவர் பாலா. டைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவருக்கு தமிழில் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்காததால் மலையாளத்துக்கு சென்று நடித்து வருகிறார். அங்கேயும் பெரிதாக மார்க்கெட் இல்லை என்றாலும், தொடர்ந்து அவருக்கு படங்கள் கிடைத்து வந்தன. பின்னர், தனது அண்ணன் சிவா, அஜித்தை வைத்து இயக்கிய வீரம் படத்தில் அவரது நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்தபடி மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்த பாலா, அதையடுத்து தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டார். அப்போதும் புதிய படங்கள் கிடைக்காததால் மறுபடியும் மலையாளத்துக்கே சென்று விட்டார்.
இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான புலிமுருகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாலா. அந்த படம் மிகப் பெரிய வெற்றியை தொட்டதால் இப்போது மலையாளத்தில் பாலாவின் வில்லன் மார்க்கெட்டும் சூடுபிடித்து விட்டதாம். இதுவரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த இயக்குனர்களெல்லாம் இப்போது அவரை தேடிச்சென்று வில்லனாக நடிக்க கதை சொல்லி வருகிறார்களாம். அதனால், கதாநாயகன் ட்ராக்கில் இருந்து விலகி, வில்லன் ட்ரேக்கில் பயணிக்கத் தொடங்கியுள்ள பாலா, புலிமுருகன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ரீமேக்காக இருப்பதால் அந்த படங்களிலும் வில்லனாக நடிப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.