டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் படம் போகன். இதனை ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
இதன் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நேற்று சென்னையில் படமாக்கப்பட்டது. நான்கைந்து சண்டை கலைஞர்களுடன் சண்டையிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஒரு சண்டை கலைஞர் ரோப்பில் பறந்து வந்து ஜெயம்ரவியின் தோள்பட்டையில் குத்த வேண்டும். தோளில் கை பட்டதும் ஜெயம்ரவி விலகி கொள்ளவேண்டும். சண்டை கலைஞர் தரையில் விழுவார் இதுகாட்சி. இந்த காட்சி படமானபோது விலக வேண்டிய ஜெயம்ரவியின் டைம் மிஸ் ஆனதால் சண்டை கலைஞரின் குத்து நிஜமாகவே தோள்பட்டையில் விழுந்தது.
கீழே சுருண்டு விழுந்த ஜெயம்ரவி வலியால் துடித்தார். படப்பிடிப்பு குழுவினர் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு லேசான எலும்பு பிசகு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து அதற்குரிய சிகிக்சை அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய ஜெயம்ரவி அங்கு ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயம் ரவி குணமாகி திரும்பியதும் படப்பிடிப்பு நடக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.