வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர் . தற்போது ஹிருத்திக், இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛காபில். இப்படத்தில் ஹிருத்திக்கு ஜோடியாக யாமி கவுதம் நடித்துள்ளார். ‛காபில் 'படத்தை ஹிருத்திக் ரோஷனின் தந்தையும், நடிகரும், தயாரிப்பாளருமாக ராகேஷ் ரோஷன் தயாரித்துள்ளார். சமீபத்தில் நடந்த விழாவில் ராகேஷ் ,‛காபில்' படத்தின் படப்பிடிப்பு 77 நாட்களில் முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதைப்பற்றி ராகேஷ் ரோஷன் கூறியதாவது...." ‛காபில்' படத்தை 88 நாட்களுக்குள் முடிக்க தான் எண்ணி இருந்தேன். இதற்காக சஞ்சய் குப்தாவை நான் அவசரப்படுத்தவில்லை. அதேசமயம், படப்பிடிப்பில் எல்லோரும் சொல்லிய நேரத்திற்கு வர வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் தான் படத்தை குறிப்பிட்ட தேதிக்கு முன் முடிக்க முடிந்தது. இப்படத்தில் எல்லோரின் உழைப்பு இருந்ததால் தான் படம் மிகவும் நல்ல முறையில், நல்ல கதைக்களத்தை கொண்டு முடிந்து இருக்கிறது. படத்தின் டிரைலர் அடுத்த வரம் வெளியாகும்"என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.