இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன இயக்குனராகி, நடிகராகி, பின்பு இயக்குனர் ஆனவர் பிரபுதேவா, தெலுங்கில் நுவ்வொஸ்தானன்டே நேனொட்டனா என்ற படத்தின் மூலம் இயக்குனரான பிரபுதேவா தமிழில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களையும், விஷால் நடித்த வெடி, ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படங்களையும் இயக்கினார். அதன் பிறகு இந்திக்கு சென்ற பிரபுதேவா அங்கு வாண்டட், ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக உயர்ந்தார்.
இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் தயாரித்து, நடித்த தேவி படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அடுத்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. படத்தின் தலைப்பு கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இதில் கருப்பு ராஜாவாக விஷாலும், வெள்ளை ராஜாவாக கார்த்தியும் நடிக்கிறார்கள். இருவரில் ஒருவருக்கு தமன்னா ஜோடி மற்றவருக்கு ஜோடி தேடுகிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.