பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய திரைப்பட வரலாற்றில் பிரமாண்டமாகவும், பிரமாண்ட வசூலையும் குவித்த படம் ‛பாகுபலி'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகியிருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இன்னும் சில மொழியிலும் வெளியாக உள்ள இப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனமான சோனி டிவி., ரூ.51 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் டப்பிங் படம் ஒன்றின் சாட்டிலைட் உரிமம் இவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பது இதுவே முதன்முறை என்கிறார்கள். ஏற்கனவே முதல்பாகத்தையும் இந்த டிவி நிறுவனம் தான் வாங்கியிருந்தது, அதனால் இரண்டாம் பாகத்தையும் இதே நிறுவனத்திற்கு பாகுபலி தயாரிப்பாளர் வழங்கியிருக்கிறார்.