தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‛2.O' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக கபாலி படத்தை முடித்த கையோடு அமெரிக்க சென்ற ரஜினி அங்கு சிலவாரங்கள் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர் கபாலி ரிலீஸான பிறகு சென்னை திரும்பிய ரஜினி, தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார். கடந்தமாதம் முதல் ‛2.O' படப்படிப்பில் பங்கேற்று நடித்து வந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னரே அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் இப்போது தான் அவர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சிலநாட்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் சென்னை திரும்பவுள்ள ரஜினி, அதன்பின்னர் தொடர்ந்து ‛2.O' படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெரிகிறது.