இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
த்ரிஷா அரண்மணை 2 படத்தில் பேயாக நடித்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கில் தயாரான நாயகி படத்திலும் பேயாக நடித்தார். இந்த நிலையில் அவர் பேயாக நடிக்கும் மோகினி படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி உள்ளது. இது உலகம் முழுவதும் பயணிக்கும் பேய் கதை.
தமிழ் நாட்டில் ஒரு பெண்ணை நாசமாக்கியவர்கள் உலகம் முழுவதும் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் பேயாக மாறி த்ரிஷாவின் உடலுக்குள் புகுந்து எப்படி உலகம் முழுவதும் சென்று அவர்களை பழிவாங்குகிறார் என்கிற கதை. விஜய் நடித்த மதுர படத்தை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்கும் படம். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார், விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். மார்வெல் ஒர்த் புரொடக்ஷன் சார்பில் எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரிக்கிறார்.
இதுகுறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது: நான் முன்பு போல இல்லை. கதைகளை கேட்டு எனது கேரக்டர்கள் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். ஒரு நடிகை எல்லா கேரக்டரிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதால்தான் பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது அதில் நிறைவு பெற்றுவிட்டேன். இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். மோகினிதான் கடைசி பேய் படம். நடிக்க வேண்டிய கேரக்டர் நிறைய இருக்கிறது. நல்ல கதை, வித்தியாசமான கேரக்டர் என்றால் புதுமுக இயக்குனர்கள், புதுமுக நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்" என்கிறார் த்ரிஷா.