ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியானால்தான் ஆரோக்கியமான போட்டி இருக்கும். யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது? யாருக்கு செல்வாக்கு இல்லை என்பது தெரிய வரும். இதற்கு பயந்தே பல ஹீரோக்கள் போட்டியில் குதிக்க பயப்படுகிறார்கள். தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் கூட போட்டியில் குதிக்காமல் பின்வாங்குகின்றனர்.
இந்த வருட தீபாவளிக்கு ஏகப்பட்ட படங்கள் வருவதாக சொல்லப்பட்டது. தற்போது கார்த்தியின் 'காஷ்மோரா', தனுஷின் 'கொடி', நதியா நடித்துள்ள 'திரைக்கு வராத கதை', மா.கா.பா.ஆனந்தின் 'கடலை' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே இந்த தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் தீபாவளி முடிந்ததும் நவம்பர் மாதம் வரிசையாக நிறைய தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கின்றன.
அவற்றில் வெங்கட் பிரபு இயக்கும் 'சென்னை -28 இரண்டாம் பாகம்' நவம்பர் 10-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவிருக்கிறது. மறுநாள் நவம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'புரூஸ்லீ', ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்துள்ள 'மீன் குழம்பும் மண்பானையும்' ஆகிய படங்கள் ரிலீசாகின்றன.
நவம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக் கிழமை விஷாலின் 'கத்திசண்டை', விஜய் ஆண்டனி நடித்து வரும் 'சைத்தான்' ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த படங்களைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் தேதி விக்ரம் பிரபுவின் 'வீரசிவாஜி', ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த படங்களுடன் சி.வி.குமார் முதன்முறையாய் இயக்கியுள்ள 'மாயவன்' திரைப்படமும் நவம்பரில் வெளியாகிறது.