Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைக்கு இமேஜ் தேவையில்லை! -பூர்ணா

20 அக், 2016 - 09:49 IST
எழுத்தின் அளவு:
actress-poorna-is-happy-with-the-movie-savarakathi

ஜன்னல் ஓரம், தகராறு படங்களுக்குப்பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூர்ணா, தற்போது தமிழில் மணல் கயிறு-2, சவரக்கத்தி, அம்மாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் வழக்கமான நாயகியாக இல்லாமல் பர்பாமென்ஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.


இதுபற்றி அவர் கூறுகையில், மணல்கயிறு-2 படத்தில் அழுத்தமான ரோலில் நடிக்கிறேன். மணல்கயிறு படத்தில் தனக்கு வரவேண்டிய மனைவி இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் பத்து கண்டிசன்களை போடுவார். அதேமாதிரி இந்த படத்தில் எனக்கு வரவேண்டிய கணவர் இந்தந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நான் கண்டிசன் போடுவேன். அதையடுத்து நடக்கும் பிரச்சினைகளும், குழப்பங்களும்தான் இந்த படம். தற்போதைய நவீன கால கணவன் மனைவி பிரச்சினைகள் அடிப்படையில் அப்படம் தயாராகியுள்ளது.


அதேபோல், சவரக்கத்தி படத்தில் ஐந்து, ஆறு வயசு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். அதோடு ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும். இந்த வேடத்தில் நடிப்பதற்கு பல நடிகைகள் மறுத்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் இந்த மாதிரியான வேடங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். அதோடு, நடிகைக்கு இமேஜ் தேவையில்லை என்று நினைப்பவள் நான். அந்த வகையில் இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் ரொம்ப யதார்த்தமான ஒரு குடும்பப் பெண்ணின் கதாபாத்திரம். அதனால் அதை உணர்ந்து நடித்துள் ளேன்.


அந்த வகையில், தற்போது நடித்து வரும் படங்களில் எனது திறமைக்கு நல்ல தீனி கிடைத்திருப்பதாக கருதுகிறேன். தொடர்ந்து சவால் விடக்கூடிய கதைகளில் நடித்து நல்ல பெயரெடுத்து நல்ல நடிகை என்ற இமேஜ் கிடைத்தால் போதும் என்பதே எனது விருப்பமாக உளளது என்று கூறும் பூர்ணா, நடிகைக்கு திறமை மட்டுமே போதாது. சரியான சந்தர்ப்பமும், சரியான வேடங்களும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்பதை எனது அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in