தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
ஒரு காலத்தில் ராமாராஜான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தன. அதேபோல் இப்போது விஜய்சேதுபதி நடித்த படங்கள் சில வார இடைவெளியில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. சேதுபதி, காதலும் கடந்துபோகும், இறைவி, என விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே வெளியாகிவிட்டநிலையில், கடந்த மாதம் தர்மதுரை படம் வெளியானது.
தர்மதுரை படம் அண்மையில் 50 ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் ஆண்டவன் கட்டளை படமும், அதற்கு அடுத்தடுத்த வாரத்தில் றெக்க படமும் வெளியாகின.
இந்தப் படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் டி.ராஜேந்தர் காமெடியனாக நடிக்கிறார். மடோனா செபஸ்டின் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, தொடர்ந்து புனே உள்ளிட்ட முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படத்தை வெளியிட உள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் 7-வது படம் இது.