பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
கத்திசண்டை படத்தை முடித்துவிட்ட விஷால், அடுத்தப்படியாக மிஷ்கினின் ‛துப்பறிவாளன்' படத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது சொந்த தயாரிப்பான விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். புதியவர் மித்ரன் இயக்கும் இப்படத்திற்கு இரும்பு திரை என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
விஷால் ஜோடியாக முதன்முறையாக சமந்தா நடிக்கவுள்ளார். கூடவே படத்தின் மற்றொரு சிறப்பாக விஷாலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யா, இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று ஆரம்பமானது. ஆக்ஷ்ன் கலந்த டெக்னிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. துப்பறிவாளன் படத்தை முடித்ததும் இரும்புத்திரை-யில் நடிக்க உள்ளார் விஷால்.