சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் என முந்தைய ரஜினிமுருகன் கூட்டணியே மீண்டும் ஜோடி சேர, அக்டோபர் 7ம் தேதி வெளியான படம் ரெமோ. சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் ஏற்று அசத்தியிருந்தார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ஆஸ்கர் நாயகர் ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு என பிரமாண்ட படமாக வெளிவந்த ரெமோ படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் சிறப்பாகவே இருந்தது. 10நாட்களில் சுமார் ரூ.40 கோடி வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி, சிவகார்த்திகேயனை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். இது சிவகார்த்திகேயனை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ரெமோ படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.