ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில், தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். இவரது நடிப்பில் வெளியான கஹானி படம் சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில், வித்யாபாலன் தேடப்படும் கொலை குற்றவாளியாக துர்கா ராணி சிங் எனும் வேடத்திலும், அர்ஜூன் ராம்பால், போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். முந்தைய பாகத்திற்கும், கஹானி-2 விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, புதிய கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. கஹானி 2 படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார்.
இந்நிலையில் கஹானி 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக இப்படம் நவ.,25-ம் தேதி ‛டியர் ஜிந்தகி' படத்துடன் மோத இருந்தது. தற்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது.