ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரின் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்துள்ள படம் யாக்கை. கிருஷ்ணா, சுவாதி, பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். குழந்தை வேலப்பன் இயக்கி உள்ளார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் மருத்துவ உலகின் ரகசியங்களை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் குழந்தை வேலப்பன் கூறியதாவது: யாக்கை என்பது தமிழ் சொல்லா? என்று என்னிடம் சிலர் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. யாக்கை என்பது திருவள்ளுவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தை. உடம்பு என்று பொருள். தமிழ்நாட்டில்தான் தமிழ் தலைப்புக்கு விளக்கம் சொல்ல வேண்டியது இருக்கிறது. மனித உடம்பு அன்பாலும், காதலாலும் உருவாகி அதைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறக்கும் மனிதனுக்கு எந்த நோயும் இருப்பதில்லை. ஆனால் அவன் வாழும் சூழ்நிலை அவனுக்கு நோயை தருகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, இயற்கை உணவுகளை உண்டு வளர்ந்த மனிதன் எப்படி நோய்க்கும், மருந்துக்கும் அடிமையாகி போனான். இன்று உலகம் எப்படி மருத்துவத்துறையின் கைகளுக்குள் அடிமைப்பட்டு இருக்கிறது. மருத்துவத்துறை மனித வாழ்வில் எந்த அளவிற்கு ஊடுருவி உயிர்களுடன் விளையாடுகிறது என்பதை பற்றிய படம். கனமான சப்ஜெக்ட்தான். ஆனால் அதனை இலகுவாக, கமர்ஷியலாக, எண்டர்டெயின்மெண்டாக சொல்கிறோம். என்கிறார் குழந்தை வேலப்பன்.